×

தமிழ்நாட்டில் பாஜக சார்பில் பணப்பட்டுவாடா செய்ய திட்டம்?.. தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக சார்பில் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்துள்ளது. நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி நள்ளிரவில் பிடிபட்டது. சென்னையில் ரூ.4 கோடி கடத்தி வந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடைபெற்றது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கணேஷ்மணி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி வீட்டில் ரூ.2 லட்சம் பணம், பரிசுப்பொருட்கள் சிக்கின.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் சிக்கின. நெல்லையில் நடத்தப்பட்ட சோதனையிலும் பா.ஜ.க. பிரமுகரிடம் பணம், பரிசுப்பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு நிலவி வருகிறது. நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க பா.ஜ.க.வினர் மேலும் பல கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளதுள்ளனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பல கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருக்கு திமுக வலியுறுததியுள்ளது.

The post தமிழ்நாட்டில் பாஜக சார்பில் பணப்பட்டுவாடா செய்ய திட்டம்?.. தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Dimuka ,Election Commission ,Chennai ,J. K. ,Nayinar Nagendran ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...